மனிதம் சிதைந்து இறந்து தோற்றது
வென்றது யுத்தம்!
போதி மரத்தில் வைசாக விளக்கு
குற்றுயிராய் ஈசல்!
காகிதமும் மின் கடத்தியா? சுர் என்று சுட்டதே
மின்சார கட்டணம்!
குஞ்சுக்கு இரை தேடிய காகத்திடம் சிக்கியது
கோழிக்குஞ்சு!
தமிழக தேர்தல் சந்தை அமோக விற்பனை
ஈழத்து இரத்தம் !
ஒப்பாரிகளால் இதயம் குளிரும்