Wednesday, October 10, 2012

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 60



விட்டில்களின் சாம்பல் மேல்
வீராய்ப்புடன் நிற்கிறது
விளக்கு!

Monday, August 31, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 59


பாவத்தை தொலைக்க
பள்ளிவாசலில் பிரார்த்தனை
பாதணி தொலைந்தது

Thursday, June 25, 2009

Saturday, May 23, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 57


மனிதம் சிதைந்து  
இறந்து தோற்றது  
வென்றது யுத்தம்!

Monday, May 11, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 56


போதி மரத்தில்  
வைசாக விளக்கு  
குற்றுயிராய் ஈசல்!

Thursday, May 7, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 53



காகிதமும் மின் கடத்தியா?  
சுர் என்று சுட்டதே  
மின்சார கட்டணம்!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 52


குஞ்சுக்கு இரை தேடிய  
காகத்திடம் சிக்கியது  
கோழிக்குஞ்சு!

Monday, May 4, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 51


தமிழக தேர்தல் சந்தை  
அமோக விற்பனை  
ஈழத்து இரத்தம் !