Monday, August 31, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 59


பாவத்தை தொலைக்க
பள்ளிவாசலில் பிரார்த்தனை
பாதணி தொலைந்தது

Thursday, June 25, 2009

Saturday, May 23, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 57


மனிதம் சிதைந்து  
இறந்து தோற்றது  
வென்றது யுத்தம்!

Monday, May 11, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 56


போதி மரத்தில்  
வைசாக விளக்கு  
குற்றுயிராய் ஈசல்!

Thursday, May 7, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 53



காகிதமும் மின் கடத்தியா?  
சுர் என்று சுட்டதே  
மின்சார கட்டணம்!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 52


குஞ்சுக்கு இரை தேடிய  
காகத்திடம் சிக்கியது  
கோழிக்குஞ்சு!

Monday, May 4, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 51


தமிழக தேர்தல் சந்தை  
அமோக விற்பனை  
ஈழத்து இரத்தம் !

Sunday, May 3, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 50


ஒப்பாரிகளால் 
இதயம் குளிரும்  
சவப்பெட்டிக்கடை!

Sunday, April 26, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 49


கால்கள் இல்லாததனால்
கல்லில் சலங்கையா ?
நதியின் நர்த்தனம்!

Saturday, April 25, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 47



உறங்கும் ஏரியின்
உறக்கத்தை கலைத்தது
சிறிய நீர்த்துளி!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 46


கண்ணாடியின் மீது
நீர்ச்சாய ஓவியம்
மழைத்துளி !

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 45


மனிதனுக்கு மட்டுமென்ன
மழைக்கும் வேண்டுமாம்
குடையாய் காளான்!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 44



துளியாய் வந்து என் குடைக்கு
தாளம் போட்ட மழை
வெள்ளமாகி கொள்ளையிட்டது

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 43



எந்த உயிருக்கும் துன்பம் கொடுக்காதே
சாந்தமாய் வீற்றிருந்தார் புத்த பகவான்
பூஜை மலரில் இரத்தவாடை!

Friday, April 24, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 42


அரசை ஆதரிப்பது சமுதாய வளர்ச்சிக்கு தானாம்
அதனால் நன்றாக வளர்ந்தது
அமைச்சரின் வயிறும் குடும்பமும் !

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 41


பஞ்சசீலத்தைப் பற்றியதால்
ஈ எறும்பைக் கொல்வதில்லை
பிணமாய் மனிதர்கள்!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 40



அசிங்கத்தை உண்ணும் காகம்
இனத்தையே அழைக்கிறது
அதற்க்கு மாறாய் அரசியல்வாதி !

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 39


சிட்டுக் குருவிக்கு சிறகே சுதந்திரம்
அது ஆகாயத்தில் ஆனந்தமாய்!
என் வீட்டு வாசலில் முள் வேலி

Thursday, April 23, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 38



கரை ஏற விடுங்கள் என
கால்களைப்பிடித்து கேட்கிறது
கடல் அலைகள்

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 37



தென்றல் சிதைத்ததா?
என்ன கொடுமை
நிலத்தில் ரோஜா இதழ்

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 36



வாளிக்குள் வர
மறுத்தது
கிணற்றில் நிலவு!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 35


நட்சத்திரங்களோடு கதைத்து
நித்திரையாகின பிள்ளைகள்
ஓட்டைக் கூரை

Monday, April 20, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 34


செஞ்சோற்று கடன் பட்டவை
சுற்றி சுற்றி நக்கின
கால்கள் சுத்தம்!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 33


பாவத்தின் சம்பளம் மரணமாம்  
மரணத்தின் சம்பளம் இவர்களா?  
ஈராக் மக்கள்!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 32


இரத்தம் தோய்ந்த சப்பாத்துகள்  
இறைச்சித் துண்டங்களாய் சிறுவர்கள்  
பயங்கரவாதம் நிறைவு!

Sunday, April 19, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 31


சகல ஜீவன்களும் சுகமாய் வாழ்க  
காருண்ய புத்த போதனை  
கூரிய ஆயுதமாய் சிங்கள வாதம் !

அஸீஸ் நிசாருத்தீனின் ஹைக்கு கவிதை 30


வருடிவிடப் போனேன்  
வலியைத் தந்தது 
ரோஜா முள்!

அசீஸ் நிசாருத்தீனின் ஹைக்கு கவிதை 29




தற்கொலைக்காக நீண்டு படுத்தும்
தப்பித்துக்கொண்டன
தண்டவாளங்கள்!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 28


சிதைந்த உடலங்களுக்குள்  
தேடிப்பார்த்தேன்  
மனித நேய நடவடிக்கை !

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 27


பௌர்ணமி நிலவில் பௌத்த விகாரை 
வாசலில் சோதனைச் சாவடி  
உயிர்க்குடிக்க ஆவலாய் ஏ கே 47

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 26


கவிஞன் கண் திறக்க மாட்டானாம்  
கண்ணீர் வடிக்கிறது  
கல்லறையின் புல்லில் பனித்துளி !

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 25


அஹிம்சை அழுகிறது  
இரத்தக் கறையின் கரங்களில்  
புத்தர் சிலை !

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 24





வாருங்கள் வழி காட்டுகிறேன்  
இருட்டில் நிற்கிறது  
வெளிச்ச வீடு!

Saturday, April 18, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 23


இரை இல்லாதவரிடம்
கொசுக்கள் சுற்றி சுற்றி தேடுகின்றன
இரையை !

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 22


என்னை பெரியவனாய் காட்டும்
சிலவேளை சிறியவனாய் மாற்றும்
அரசியலைப்போல எனது நிழல்!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 21


நடுநிசியில் உன் நச்சரிப்பு  
நித்திரையை கலைக்கிறது 
நுளம்பு !

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 20


சங்கீதம் இன்பமானது என்பதற்காக
உன்னை நான் நேசிக்கமாட்டேன்
காதின் அருகில் நுளம்பு

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 19



ஊதியம் இல்லாமல்
ஊழியம் செய்கிறது
வயல்காட்டு பொம்மை!

Friday, April 17, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 18


தீயும் திரியும் உறிஞ்ச
எண்ணையோடு விடைபெற்றது
இருட்டு

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 17



ஆடை கலைந்து
நீலமாய்..... நிற்கிறது
வானம்

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 16



வாகன நெரிசல்
திரு திருவென விளிக்கிறது
தெருவோர நிற விளக்கு

Wednesday, April 15, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 15




தசையை உண்ட நாய்
எலும்பை எறிந்தது
ஆபிரிக்க பஞ்சம்

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 14



இந்த பசுமையை
கொள்ளை இட்டது யார்?
இலையுதிர் காலம்

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 13


உடன் வந்து
இடை நடுவில் பிரிந்தாயே
அறுந்த செருப்பு

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 12


பூக்களைக்கொன்றா
பிணத்திற்கு அஞ்சலி
மலர்வளையம்

Monday, April 13, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 11




அழு நன்றாக அழு
அழுகையே ஆனந்தம்
புல்லங்குழல்

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 10



புல்லாங்குழல்

விரல்களால் அடைத்து
உன் சுவாசத்தை சிதைத்தேன்
நீ அழுவதே ஆனந்தம்

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 09


இறந்த ஹிட்லர்
எப்போது எழுந்தான் ?
உலகமே கொலைக்களம்

Sunday, April 12, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 08



அஹிம்சை?

கதர் ஆடைத்துணியினால்
கபன் ஆடை சமைத்தனர்
குஜராத் கொலைக்களம்!

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 07



கல்பில் இருந்து
பிரிந்த கலிமா
கொடியில் பதிந்தது